Founders
Al-Hamiya Arabic College – Sri Lanka
OUR Founders
Founded by passionate educators, Al Hamiya Arabic College is driven by a clear mission: to preserve Arabic language and culture through exceptional education. Guided by visionary founders, the college equips students with linguistic proficiency, cultural appreciation, and academic excellence. With a commitment to excellence and a deep understanding of the global relevance of Arabic, Al Hamiya Arabic College stands as a leading institution, empowering students to navigate the world while honoring Arabic traditions.
Marhoom Al-Haj, Doctor. A.L.M.JAMEEL
(MBBS, RCOG, FRCOG, MCGP, MSLOG)
FOUNDING PRESIDENT
Marhoom Al-Haj, As-Sheikh. S.M.M.SAHIB
(Sheikh Ibrahem) (Gafoori,Nadhvi,Lagno)
GENERAL SECRETARY, PRINCIPAL
BILL SMALLER
Web Designer
Richard Johnson
Web Designer
MICHAEL KINGDOM
Web Designer
GEORGE SMILE
Web Designer
BILL SMALLER
Web Designer
அல்- ஹாமியா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்
மர்ஹும் Dr. ALM.ஜெமீல்
பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணரும், கல்வியியலாளரும் சமூக சேவையாளரும் இந்நாட்டின் சமாதான அமைதிக்காக பாடுபட்டவருமான மர்ஹூம் Dr.ALM. ஜெமீல் அவர்கள் 1940 ம் ஆண்டில் கல்முனைக் குடியில் பிறந்து 2008 ஒக்டோபர் 24 ம் திகதி இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
கல்முனைக்குடியின் பிரபல வர்த்தகருள் ஒருவரான அலி உதுமான் லெப்பையின் மகனான இவர் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும், கல்முனை சென்மேரிஸ் கல்லூரியில் ஆங்கில மொழிக்கல்வியையும், இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும், உயர்கல்வியை கொழும்பு சாஹிறாக் கல்லூரியிலும் கற்று 1960 ல் கொழும்பு பல்கழைக்கழக மருத்துவ பீடத்துக்குத் தெரிவானார். பின்னர் தனது உயர்கல்விக்காக பிரித்தானியா சென்று MRCOG, FRCOG போன்ற பட்டங்களைப் பெற்றார். பிரித்தானியாவில் இருந்து திரும்பியதும் தனது சொந்த மண்ணில் தனது வைத்தியச் சேவையை ஆரம்பித்து Central nursing மகப்பேற்று நிலையம் எனும் பெயரில் தனது சொந்த மருத்துவமனையை ஆரம்பித்து இப்பிரதேச மக்களுக்கு கிடைத்ததோர் வரப்பிரசாதமாய் அதை மாற்றிச் சேவை செய்தார்.
இவர் வைத்தியத்துறையில்; மாத்திரம் தனது பணிகளை மட்டுப்படுத்தவில்லை. இப்பிரதேசத்தின் கல்வி, சமூக, சமய மற்றும் கலாசார நடவடிக்கைகள் அனைத்திலும் அபார ஈடுபாடு காட்டினார். இவர் வெளிநாடுகளில் கல்வி கற்ற சூழலும் வெளிநாட்டுப் பயணங்களும் இவரது தூர நோக்குக்குத் தளமாக அமைந்தது. இவரது சமூகப்பணிகளில் ஒன்று கல்முனை அல்-ஹாமியா அரபுக் கலாபீடத்திற்கு ஆயுட்காலத் தலைவராக தான் மரணிக்கும் வரைக்கும் செயற்பட்டு சிறப்பாக வழிநடாத்தி வந்தமையாகும்.
2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இக்கல்லூரி முற்றிலும் பாதிப்படைந்தும், மிகக் குறுகிய காலத்தினுள் இதை மீளக் கட்டியமைத்த பெருமை இவரையே சாரும். இவர் தான் பிறந்த தனது பிரதேசத்தைத் தாண்டி நாடளாவிய ரீதியில் சமூகப்பணிகள் பல செய்துழைத்தார். இளைஞர் அமைப்பு, இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் போன்றவற்றில் இணைந்து முஸ்லிம்களின் உயர் கல்விக்காக உழைத்தார். இனப் பிரச்சினையின் போது சமூக அமைதி பேணவும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தில் உம்மா என்ற கட்சியை அமைத்து சமூக எழுச்சிக்காக பாடுபட்டார். தனது சொந்த ஊரில் ஜுமுஆப்பள்ளியின் புனரமைப்பு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்தி, ஸகாத் நிதியத்தின் புனருத்தாரணம், கல்முனை பிரஜைகள் குழு போன்ற பொதுப்பணிகளில் பல்வேறு உயர் பதவிகளை அலங்கரித்து பணிபுரிந்தார்.
மக்கள் சேவகனான இவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பல்கலைக்கழகங்களில் மருத்துவ துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்ததோடு, சவுதி அரேபியாவின் தாய் வைத்தியசாலையில் வைத்திய நிபுணராகவும் கடமையாற்றினார். இவர் இஸ்லாத்திற்கு எதிரான அத்வைதம், ஷிர்க், குப்ர், என்பனவற்றிற்கு சாவு மணி அடிப்பதில் உறுதியாக இருந்து செயலாற்றி தனது 68 வது வயதில் இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் மறுமை வாழ்வு ஒளி பெற வல்ல இறைவனை இருகரமேந்தி பிராத்திக்கின்றேன்.
அஷ்ஷெய்க் யூ.எல்.எஸ்.ஹமீட் – ஹாமி SLPS-I
உபசெயலாளர்
ஆளுநர் சபை
அல்ஹாமியா ஸ்தாபக பொதுச் செயலாளர்
மௌலவி பாஸில் எஸ்.எம்.எம். சாஹிப் – (கபூரி, நத்வி, லக்னோ)
அஹமட்லெப்பை ஹாஜியார் சாஹுல் ஹமீட் அவர்களின் மூத்த புதல்வராக 1925.10.25ம் திகதி கல்முனையில் பிறந்த இவர்கள் ஆரம்பக் கல்வியை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கற்றார்கள். பின்னர் மார்க்கக் கல்வியை மஹரகம கபூரியா அரபிக் கல்லூரியில் பூர்த்தி செய்து பின்னர் அங்கேயே ஆசிரியராக கடமையாற்றியதுடன், மேற்படிப்பை இந்தியா லக்னோவிலுள்ள நத்வதுல் உலமா கல்லூரியில் பூர்த்தி செய்தார்கள். இவர்கள் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை, அல்-அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் அஸ் ஸுஹரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மௌலவி ஆசிரியராக கடமையாற்றினார்கள். மேலும் சிங்களம், ஆங்கிலம், அரபு, ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் நன்றாக பேசக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் ஷேகு இப்றாஹிம் மௌலவி என்று கிழக்கு மாகாண மக்களினால் அழைக்கப்பட்டார்கள்.
1977ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹிமாயத்துல் இஸ்லாம் இயக்கத்தின் ஸ்தாபக செயலாளராக கடமையாற்றினார்கள். கல்முனை ஹிமாயத்துல் இஸ்லாம் இயக்கத்தின் முயற்சியின் மூலமாக 1979ம் ஆண்டு கல்முனை பிரதான வீதியில் மறைந்த காசிம் ஹாஜியாரின் கடைத் தொகுதியின் மேல் மாடியில் ஆரம்பிக்கப்பட்ட அல் ஹாமியா அரபிக் கல்லூரியின் ஸ்தாபக அதிபராக முஸ்தபா மௌலானா அவர்கள் சிறிது காலம் பதவி வகித்தார்கள். அதனைத் தொடர்ந்து பதவியேற்ற ஷேகு இப்றாஹிம் மௌலவி 1998ம் ஆண்டு வரை கடமையாற்றினார். பின்னர் அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாக மரணிக்கும் வரை செயற்பட்டார். அவர் கல்முனை ஹிமாயத்துல் இஸ்லாம் இயக்கத்தினை 1992ஆம் ஆண்டின் 29ஆம் இலக்கத்தின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் கூட்டிணைத்தல் சட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் M.H.M. அஷ்ரப் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். இவர்களுக்கு நாட்டின் அரசியல் பிரமுகர்களுடன் நெருக்கமான உறவும் காணப்பட்டது. மேலும் 1984ம் ஆண்டு ஹஜ் கடமைக்காக சென்றபோது மறைந்த முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.எல்.எம். ஜெமீல் அவர்களுடன் இணைந்து பெருமளவு பணத்தினை திரட்டி அதில் மத்ரசாவுக்கான காணிகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன், மத்ரசாவின் அசையா சொத்துக்களை பல தனவந்தர்களிடமிருந்து நன்கொடையாக பெறுவதில் ஆளுநர் சபையுடன் முன்னின்று செயற்பட்டார்கள். அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆளுநர் சபையினால் “ஷைகுல் ஹாமி’ என்ற பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
அல்-ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து வெளியாகும் மௌலவிகள் மார்க்க கல்வியுடன் தான் சுயமாக தனது வாழ்வினை கொண்டு செல்வதற்காக உலகளாவிய, தற்கால, நவீன கல்வியினையும் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
இக்கல்லூரியிலிருந்து மெளலவிகளாக வெளியாகுபவர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாகவும் பேராசிரியர்களாகவும், கலாநிதிகளாகவும் உருவாகியிருப்பதுடன் இலங்கையிலும் உலக நாடுகளிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் கடமையாற்றுகின்றார்கள். இது நாட்டிலுள்ள பல அடிக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
மௌலவி எஸ்.எம்.எம் சாஹிப் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவராக நீண்டகாலம் பணியாற்றியதுடன், 1986 தொடக்கம் 1998ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும், கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக 1989 ஆம் ஆண்டிலிருந்து மரணிக்கும் வரையும் செயற்பட்டார்கள்.
மெளலவி எஸ்.எம்.எம். சாஹிப் அவர்கள் தனது உயிருக்கு ஆபத்தான வேளையில் கூட, விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தைரியமாக விவாதம் நடாத்திய ஒரு மௌலவியாக திகழ்ந்தவர் என்பதை கல்முனை மக்கள் அறிவார்கள். மேலும் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது இந்திய இராணுவத்தினால் அமைக்கப்பட்ட கல்முனை “சிட்டிசன் கொமிட்டி”யின் தலைவராக நியமிக்கப்பட்டார்கள். இந்திய இராணுவத்தின் மொழி பெயர்ப்பாளராகவும் இந்திய இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பல பேச்சு வார்த்தைகளின் போது முஸ்லிம்களின் சார்பாக கலந்து கொண்டார்கள்.
மௌலவி அவர்களின் சந்ததியினர் சிறந்த முறையில் கல்வி கற்று வைத்தியர்களாகவும் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் மேலும் பல்வேறு துறைகளில் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
தனது இறுதி நாட்களில் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் போதகராக பணிபுரிந்த ஹஸ்ரத் அவர்கள் தனது 74ம் வயதில் 1999.11.14ம் திகதி வபாத்தானார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து சுவனப் பிரவேசத்தை வழங்குவானாக!
எம்.எம். சமீலுல் இலாஹி
எண் பார்வையாளர்
ஆளுநர் சபை

